Saturday, 9 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 9
  
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்

வர்கச்சக்கரங்கள்  அமைக்கும் முறை
D16 என்பது சோடசாம்சம் 30/16  = 1பாகை 52கலை30
சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும் துவங்கும்

D20 என்பது விம்சாம்சம் 30/20  = 1பாகை 30கலை
சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும் துவங்கும்

D24  என்பது சதுர்விம்சாம்சம் 30/24  = 1 பாகை 15கலை

ஆண் ராசிகளில் வருபவை சிம்மம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை கடகம் முதலும் துவங்கும்

D30 என்பது திரிம்சாம்சம்
ஆண் ராசிகளில் வருபவை
0 – 5       மேஷம்
5 – 10   கும்பம்
10 – 18   தனுசு
18 – 25   மிதுனம்
25 – 30    துலாம்
பெண் ராசிகளில் வருபவை
0 – 5    ரிஷபம்
5 – 12   கன்னி 
12 – 20  மீனம்
20 – 25  மகரம்
25 – 30   விருச்சிகம்
சிம்மம் கடகத்தில் கிரகங்கள் வராது

D40  என்பது கவோடாம்சம் 30/40  = 45கலை

ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்

D45 என்பது அக்சவேதாம்சம் 30/45  = 40கலை

சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும் துவங்கும்

மற்றவை நாளை 

No comments:

Post a Comment