Tuesday, 5 May 2015

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம் 

வர்கச்சக்கரம் பதிவு 2 

வர்கச்சக்கரத்திற்கு செல்லும் முன் ராசிச்சக்க்ரத்தில் சில விஷயங்களை பார்போம் ராசிச்சக்க்ரம் என்பதும் D1 எனப்படும் ஒரு வர்க்கமே

 D1ல் கிரகணம், கிரக யுத்தம், அஸ்தங்கதம் போன்ற நிலைகளில் பலம் இழந்த கிரகங்கள் வர்க்கசக்கரத்தில் என்ன நிலையில் இருந்தாலும் பலன் இல்லை

கிரகணம், கிரக யுத்தம், அஸ்தங்கதம் போன்ற நிலைகளில் பலம் இழந்த கிரகங்களின் வீட்டில் எந்த வர்க்க லக்னம் அமைந்தாலும் அந்த வர்க்கம் தொடர்பான எந்த ஒரு பலனையும் ஜாதகன் அனுபவிக்க முடியாது

(D1ல் நீச்சம் பெற்ற கிரகத்தை வர்கச்சக்கரத்தில் பார்த்துக்கொள்ளலாம்)

உ.தா. D1ல் குரு அஸ்தங்கதம் எனில் தனுசு அல்லது மீனத்தில் தசாம்ச லக்னம்(D10 லக்னம்) அமைந்தால் ஜாதகனுக்கு தொழில் அமைவது கடினம் நிரந்தர தொழில் அமையாது

No comments:

Post a Comment