வர்கச்சக்கரம் பதிவு 10
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
வர்கச்சக்கரங்கள்
அமைக்கும் முறை
D27 என்பது பாம்சம் 30/20 = 1பாகை 6கலை40விகலை
அக்னி ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
பூமி ராசிகளில் வருபவை கடகத்தில் இருந்தும்
வாயு ராசிகளில் வருபவை துலாமில் இருந்தும்
நீர் ராசிகளில் வருபவை மகரத்தில் இருந்தும் துவங்கும்
D60 என்பது சஷ்டியாம்சம் 30/ 60 = 30கலை
அனைத்தும் அந்தஅந்த ராசிகளில் இருந்தே துவங்கும்
இனி வர்கச்சக்கரம் எப்படி பார்ப்பது என்பதை
பார்ப்போம்
எந்த வர்க்கமாக இருந்தாலும் வர்க்க லக்னாதிபதி 3/6/8/12 ல் மறைய கூடாது மேலும்
அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகமும் 3/6/8/12 ல் மறைய கூடாது
3மிடம் ஜாதகனால் ஏற்படும் இழப்பு
6மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் கடன் வழக்கு நோய்
8மிடம் அந்த வர்கத்தின் அழிவு
12 மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும்
அலைச்சல் வீண்செலவுகள்
எந்த வர்க்க லக்னமும் ஜென்ம(D1) லக்னத்தில் இருந்து 6/8/12 ல் மறைய கூடாது
கராக கிரகம் குறிப்பிட்ட வர்க்க லக்னத்தில் இருந்தால் அது
காரகோ பாவநாஸ்தி
உதா குரு D7 எனப்படும் சப்தாம்ச வர்க்க லக்னத்தில் இருந்தால் குழந்தைகளுக்கு நாசங்களை
உண்டு பண்ணும்
இது போல் மற்ற வர்க்கங்களிலும் பார்க்கவும்
ஆனால் அனைத்து வர்க்கங்களிலும்
1) செவ்வாய் 6ல் நல்லது
2) புதன் D4 எனும் சதுர்தம்ச வர்கத்தில் 8ல் நல்லது (அனாமத்து சொத்து
கிடைக்கும்)
3) சனி D8 எனும் அஷ்டாம்ச வர்க லக்னத்தில் நல்லது (தீர்காயுள்)
திசை / புத்தியை நடத்தும் கிரகங்கள் வர்கத்தில் 3/6/8/12 ல் மறைய கூடாது
அப்படி மறைந்தால் அந்த கிரகங்களின் திசா புத்தி காலங்களில் அந்த வர்கச்சக்கரம்
தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்
No comments:
Post a Comment