Tuesday, 5 May 2015

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
வர்கச்சக்கரம் பதிவு 1

ராசி சக்கரம் என்பது எக்ஸ்ரே ரிப்போர்ட் வர்க்கச்சக்கரம் என்பது ஸ்கேன் ரிப்போர்ட் வட இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக சிறப்பாக வர்கச்சக்கரம் மூலம் பலன் கூறுகின்றனர்

வர்க்கச்சக்கரம்;
ஜாதகப் பலன்கள் கூறவதற்கு கடைப்பிடிக்கப் பயன்படும் பல்வேறு முறைகளில் வர்க்கச் சக்கரங்கள் மூலம் கணித்து பலன் கூறும் முறை சிறந்த முறையாக கருதப்படுகிறது. 30 பாகை கொண்ட ஒரு இராசியை பல்வேறு சிறு அளவில் பங்கிட்டு அதனால் ஏற்படும் கூட்டு விளைவினின்று ஏற்படும் பலன்களை எடுத்துரைப்பது தான் வர்க்கச் சக்கரங்கள். பதினாறு வர்க்கச் சக்கரங்களை மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள். 


அவை:
1. இராசி - ஒரே பிரிவு - 30 பாகைகள் - அனைத்து பலன்களும்.
2. ஹோரா - இரு பிரிவு – 15 பாகைகள் - செயல் நிலை.
3. திரேக்காணம் - மூன்று பிரிவு – 10 பாகைகள்- சகோதரம், மச்சம், மரு,  

    விபத்து.
4. சதுர்த்தாம்சம் - நான்கு பிரிவு – 7 பாகை 30 கலை - அதிர்ஷ்டம், சொத்துக்கள், குழந்தைப் பருவம்.
5. சப்தாம்ஸம் - ஏழு பிரிவு – 4 பாகை 17 கலை 8.57 விகலை -குழந்தைகள்
6. நவாம்சம் - ஒன்பது பிரிவு – 3 பாகை 20 கலை - களத்திரம், திருமணவாழ்க்கை, கோள்களின் பலம், சாதகரின் அந்தஸ்து.
7. தசாம்சம் - பத்து பிரிவு – 3 பாகை – தொழில் மற்றும் ஜீவனம்
8. துவதாசம்சம் - 12 பிரிவு – 2 பாகை 30 கலை - பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள்.
9. சோடசாம்சம் - 16 பிரிவு – 1 பாகை 52 கலை 30 விகலை. - வாகனங்கள், சகபோக பொருட்கள், மகிழ்ச்சி
10. விம்சாம்சம் - 20 பிரிவு – 1 பாகை 30 கலை – உபாசன சக்தி, செயலாற்றும் தன்மை
11. சதுர்விம்சாம்சம் - 24 பிரிவு – 1 பாகை 15 கலை - உயர்கல்வி, அறிவாற்றல், கல்வியில் சாதனை.
12. பாம்சம் - 27 பிரிவு – 1 பாகை 6 கலை 40 விகலை - புறத்தோற்றம், பலம், மனநிலை, ஆன்மீகத் தொடர்பு
13. திரிம்சாம்சம் - 5 சமமற்ற பிரிவு – துன்பங்கள், தீமைகள், துர்திர்ஷ்டம்
14. சுவேதாம்சம் - 40 பிரிவு – 0 பாகை 45 கலை - அதிர்ஷ்டம், தாயர் வழிச் சொத்துக்கள்.
15. அக்ஷ்வேதாம்சம் - 45 பிரிவு – 0 பாகை 40 கலை - தந்தை வழிச் சொத்துக்கள்
16. சஷ்டியாம்சம் - 60 பிரிவு – 0 பாகை 30 கலை - முற்பிறப்பின் கர்மா, இப்பிறப்பின் பலன்கள்.

இனி வரும் பதிவுகளில் வர்கச்சக்கரம் எப்படி அமைப்பது எப்படி பார்ப்பது மேலும் அதன் மூலமாக எப்படி பலன் சொல்வது என்பதையும் பார்போம்

No comments:

Post a Comment