வர்கச்சக்கரம் பதிவு 12
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
உங்கள் அனைவர்க்கும்
வர்கச்சக்கரம் எப்படி அமைப்பது என்று தெரிந்திருக்கும் அதனால் சில வர்க்கங்களை
பற்றி இன்று பதிவிடுகிறேன்
D4 எனும் சதுர்தாம்சம்
எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்
சதுர்தாம்ச லக்னத்தில் செவ்வாய் இருந்தால் காலி இடம் ஜாதகன் பேரில் நிலைக்காது
8ல் புதன் இருந்தால் உயில் வழி சொத்து வரும் அதாவது ஒருவரின் மரணம் மூலம்
அல்லது குழந்தை இல்லாதவர்களின் சொத்து வரும்
பெண்களின்
ஜாதகத்தில் சதுர்தாம்சத்தில் 3or 8 ல் உள்ள கிரக திசை அல்லது புத்தியில் திருமணம் நடக்கும்
சதுர்தாம்சம் யாருக்கு கேட்டு உள்ளதோ அந்த ஜாதகனுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக
அமையும்
ரோகாம்சம் எனும் D 6 எப்படி பார்ப்பது என்பதை
பார்ப்போம்
D 6 லக்னத்தில் உள்ள கிரக காரகம் தொட்டு நோய் வரும்
மேலும் D 6 லக்னம் உள்ள ராசி குறித்த பஞ்ச பூத தத்துவம் கொண்ட வியாதி வரும் மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவ
நோயயை எளிதில் குணப்படுத்த முடியாது
D 6 ல் வரும் நோயை குணப்படுத்த
முடியுமா என பார்க்க D 30 ல் பார்க்க வேண்டும்
No comments:
Post a Comment