Tuesday, 5 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 6

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
இனி வர்கச்சக்கரம் எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

எந்த வர்க்கமாக இருந்தாலும் வர்க்க லக்னாதிபதி 3/6/8/12 ல் மறைய கூடாது மேலும் அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகமும் 3/6/8/12 ல் மறைய கூடாது

3மிடம் ஜாதகனால் ஏற்படும் இழப்பு
6மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் கடன் வழக்கு நோய்
8மிடம் அந்த வர்கத்தின் அழிவு
12 மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் அலைச்சல் வீண்செலவுகள்

எந்த வர்க்க லக்னமும் ஜென்ம(D1) லக்னத்தில் இருந்து 6/8/12 ல் மறைய கூடாது

கராக கிரகம் குறிப்பிட்ட வர்க்க லக்னத்தில் இருந்தால் அது காரகோ பாவநாஸ்தி

(உதா) செவ்வாய் அல்லது குரு D3 எனப்படும் திரேகான வர்க்க லக்னத்தில் இருந்தால் இளைய/மூத்த ஆண் சகோதரதங்களுக்கு நாசங்களை உண்டுபண்ணும்

இது போல் மற்ற வர்க்கங்களிலும் பார்க்கவும்

ஆனால் அனைத்து வர்க்கங்களிலும்

1) செவ்வாய் 6ல் நல்லது
2) புதன் D4 எனும் சதுர்தம்ச வர்கத்தில் 8ல் நல்லது (அனாமத்து
சொத்து கிடைக்கும்)
3) சனி D8 எனும் அஷ்டாம்ச வர்க லக்னத்தில் நல்லது
(தீர்காயுள்)

நாளை முதல் வர்கச்சக்கரம் அமைக்கும் முறையை பார்போம்

No comments:

Post a Comment