Thursday, 7 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 7

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
இன்று முதல் வர்கச்சக்கரம் அமைக்கும் முறையை பார்போம்
D1 என்பது 30 பாகை அளவு கொண்ட ராசிச்சக்கரம்

D2 என்பது 30/2 = 15 பாகை
ஆண் ராசியில் முதல் 15 பாகை சூரிய ஹோரா அடுத்த 15 பாகை சந்திர ஹோரா
பெண் ராசியில் முதல் 15 பாகை சந்திர ஹோரா அடுத்த 15 பாகை சூரிய ஹோரா

D3 என்பது திரேகானம் 30/3 = 10 பாகை
முதல் 10 பாகை அதே ராசியிலும்
இரண்டாவது 10 பாகை அதில் இருந்து 5வது ராசியிலும்
மூன்றாவது 10 பாகை அதில் இருந்து 9 வது ராசியிலும் வரும்

D4 என்பது சதுர்தாம்சம் 30/4 = 7.30 பாகை
முதல் 7.30 பாகை அதே ராசியிலும்
இரண்டாவது 7.30 பாகை அதில் இருந்து 4 வது ராசியிலும்
மூன்றாவது 7.30 பாகை அதில் இருந்து 7 வது ராசியிலும் வரும்
நாங்காவது 7.30 பாகை அதில் இருந்து 10 வது ராசியிலும் வரும்

D5 என்பது பஞ்சாம்ஸ்சம் 30/5 = 6 பாகை
சர ராசிகள் அந்த ராசியில் இருந்தும்
ஸ்திர ராசிகள் அதில் இருந்து 5மிடத்தில் இருந்தும்
உபய ராசிகள் அதில் இருந்து 9 மிடத்தில் இருந்தும் துவங்கும்

D6 என்பது சஷ்டியாம்சம் 30/6 = 5 பாகை (ரோகம்சம் – நோய் )
ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்
மற்றவை நாளை

2 comments: