Friday, 22 May 2015

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் என்னை பற்றிய ஒரு சிறு குறிப்பு 

n$hjpl brhe;j’;fSf;F ASTRO SAKTHI vd;w vd;id gw;wpa Bio Data

bgah;                  gh/rf;jpnty;   (1974)
gog;g[                  DME , DCE, DA
bjhHpy;                  n$hjplk; kw;Wk;; muR Jiw
bghGJnghf;F            n$hjplMa;t[ kw;Wk;  n$hjpl gapw;rp

vkJ n$hjpl Mrphpah;fs;
 
jpU / Re;juk;         gpUfj; guhru hora rh!;jpuk; kw;Wk; nfus gpu!;dk;

jpU / r’;fud; (Prof)             th;f;f rf;fu’;fs; kw;Wk; g[jpa Kiw n$hjpl fzpj’;fs;

jpU / bt’;fnl&;      gpUF eho kw;Wk; rhkf;nfhs; gpu!;dk;. gpUF rus; gjjp
(S/o Late குரு ராம சுப்பு)  
jpU / uhn$!;         K P Astrology    

jpU / MWrhkp       vz; fzpjk; (Numaralogy)

jpU / eluh$d;       g”;r gl;rp rh!;jpuk;

kw;Wk; ekJ n$hjpl ez;gh;fs;.              kw;Wk; ekJ n$hjpl khzth;fs;

ekJ n$hjpl  Ma;t[      th;f;f rf;fu’;fs; gw;wp KGkahf

ekJ n$hjpl  gapw;rp ikak;   _ rf;jp n$hjpl Muha;r;rp kw;Wk; gapw;rp ikak;
                         nfhit


2006 Kjy; mf;Fgpurh; kUj;JtKk;
2007 Kjy; n$hjplKk; goj;JtUfpnwhk; ,d;dKk; n$hjplh; Mf Koatpy;iy

,dp tUk; gjpt[fspy; n$hjplk; kw;Wk; kUj;JtKk; gw;wp ghh;g;nghk;

midtUk; 16k; bgw;W bgU thH;t[ thH vk;bgUkhd; _kd; ehuhazd; mUs; g[hpthdhf


vd;Wk; c’;fSld; c’;fs; rf;jpnty; (miy ngrp 9894715188)

Tuesday, 19 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 13
அனைத்து ஜோதிட ஆசான்களுக்கும் அனைத்து ஜோதிட சொந்தகளுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
பாலாரிஷ்டம்
இதை D6 & D8& D12 & D30எனும் வர்கச்சக்கரம் மூலம் கணிக்க வேண்டும்
ஒரு குழந்தை பிறந்தபின் அதன் ஆயுள் நிலை மற்றும் அந்த குழந்தையால் பெற்றோர்களின் நிலை
இதை D6 & D8& D12 & D30எனும் வர்கச்சக்கரம் மூலம் கணிக்க வேண்டும் இவை அனைத்திலும் கேடு பலன்கள் வரும் எனில் இந்த குழந்தையை கண்டிப்பாக தத்து கொடுக்க வேண்டும் சரி எப்படி தத்து கொடுப்பது எங்கு தத்து கொடுப்பது
குழந்தையை கண்டிப்பாக தத்து கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் என்ற ஊரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மடவிளாகம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் தத்து கொடுப்பது நலம் இந்த பெருமாள் கோவிலில் சிவன் சன்னதியும் உண்டு
குழந்தையை பெருமாள் சன்னதியில் தத்து கொடுத்து சிவன் சன்னதியில் திரும்ப பெறவேண்டும் மிகவும் சிறப்பு மிக்க ஆலயம் இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து
பாலாரிஷ்டம் மற்றும் ஆடிஷம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்து கொடுத்து பின் பெற்று செல்கின்றனர்
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே மேலும் விபரங்களுக்கு
சிவ அய்யர் செல் 7639549974 முழுக்க இதை சேவையாகவே செய்கிறார்கள்.

Thursday, 14 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 12

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
உங்கள் அனைவர்க்கும் வர்கச்சக்கரம் எப்படி அமைப்பது என்று தெரிந்திருக்கும் அதனால் சில வர்க்கங்களை பற்றி இன்று பதிவிடுகிறேன்

D4 எனும் சதுர்தாம்சம் எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

சதுர்தாம்ச லக்னத்தில் செவ்வாய் இருந்தால் காலி இடம் ஜாதகன் பேரில் நிலைக்காது
8ல் புதன் இருந்தால் உயில் வழி சொத்து வரும் அதாவது ஒருவரின் மரணம் மூலம் அல்லது குழந்தை இல்லாதவர்களின் சொத்து வரும்

பெண்களின் ஜாதகத்தில் சதுர்தாம்சத்தில் 3or 8 ல் உள்ள கிரக திசை அல்லது புத்தியில் திருமணம் நடக்கும்

சதுர்தாம்சம் யாருக்கு கேட்டு உள்ளதோ அந்த ஜாதகனுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக அமையும்

ரோகாம்சம் எனும் D 6 எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

D 6 லக்னத்தில் உள்ள கிரக காரகம் தொட்டு நோய் வரும் மேலும் D 6 லக்னம் உள்ள ராசி குறித்த பஞ்ச பூத தத்துவம் கொண்ட வியாதி வரும் மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவ நோயயை எளிதில் குணப்படுத்த முடியாது


D 6 ல் வரும் நோயை குணப்படுத்த முடியுமா என பார்க்க D 30 ல் பார்க்க வேண்டும் 

Tuesday, 12 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 11

அனைவர்க்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம் இனி வரும் ஜோதிட வகுப்பில் திருமணப்பொருத்தமும் நவாம்சமும்
  
அஸ்ட்ரோ சக்தியின் திருமணப்பொருத்தமும் நவாம்சமும்

திருமண பொருத்தம் பார்க்கும்போது நவாம்சம் மிகவும் முக்கியமான ஒன்று 
நட்ச்சத்திர பொருத்தம் முக்கியம் அல்ல இது நிரூபிக்கப்பட்ட உண்மை

இனி நவாம்சம் எப்படி பார்ப்பது
பொருத்தம் பார்பதற்கு முன் ஒருவருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் இதற்கு நவாம்சம் மிக முக்கியம்
ஆண் ஜாதகம் எனில் நவாம்சம் ஆண் ராசியில் வரவேண்டும்
பெண் ஜாதகம் எனில் நவாம்சம் பெண் ராசியில் வரவேண்டும்
இது 80% வரை பொருந்தும்

நவாம்ச லக்னம் சரியாக வரவில்லை எனில்  4 நிமிடம் வரை பிறந்த நேரத்தை சரி செய்யவும்

இனி முக்கியமான விசயத்திற்கு வருவோம்

நவாம்சம் எப்படி பார்ப்பது
எந்த ஜாதகமாக இருந்தாலும் நவாம்ச லக்னாதிபதி நவாம்ச லக்னத்தில் இருந்து 3/6/8/12ல் மறைய கூடாது

ஆண் ஜாதகம் எனில் சுக்கிரன் நவாம்சத்தில் 1/3/6/8/12ல் இருக்க கூடாது
பெண் ஜாதகம் எனில் குரு நவாம்சத்தில்  3/6/8/12ல் இருக்க கூடாது  

மேலும் எந்த ஜாதகமாக இருந்தாலும் ஜென்ம லக்னத்திற்கு நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது

மேலும் பெண்கள் ஜாதகத்தில் உள்ள நவாம்சதில் இருந்து ஆணின் நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது

மிக மிக முக்கியமானது ராசி சக்கரதில் பலவீனம் அடைந்த கிரகத்தின் வீட்டில் நவாம்ச சக்கரம் வந்தால் எந்த பலனும் இல்லை

நவாம்சத்தில் மூன்று அல்லது எட்டில் நிற்கும் கிரக திசையில் வாழ்கை துணைக்கு மரணம் அல்லது வாழ்கை துணையை பிரியவேண்டிவரும் ஆறில் நிற்கும் கிரகம் சம்பந்தப்பட்ட நோய் வாழ்கை துணைக்கு வரும் 12ல் நிற்கும் கிரக திசை/புத்தியில் வாழ்கை துணையை விட்டு வெகு தொலைவுக்கு செல்ல வேண்டி வரும்

நவாம்ச லக்னாதிபதி 6ல் இருந்தால் வாழ்க்கை முழுவதும் சண்டை சச்சச்சரவு தான்

நவாம்சத்தில் இரண்டாம் இடத்தில உள்ள கிரக எண்ணிக்கை கொண்டு ஜாதகனின் இரகசிய தொடர்பை கூறலாம் .

ஆண் /பெண் இருவருக்கும் இது பொருந்தும்

(
பலம் பெற்ற குருவின் பார்வை இதை மாற்றும் )

Saturday, 9 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 10
  
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்

வர்கச்சக்கரங்கள்  அமைக்கும் முறை

D27 என்பது பாம்சம் 30/20  = 1பாகை 6கலை40விகலை 
அக்னி ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
பூமி ராசிகளில் வருபவை கடகத்தில் இருந்தும்
வாயு ராசிகளில் வருபவை துலாமில் இருந்தும்
நீர் ராசிகளில் வருபவை மகரத்தில் இருந்தும் துவங்கும்

D60 என்பது சஷ்டியாம்சம் 30/ 60 =  30கலை
அனைத்தும் அந்தஅந்த ராசிகளில் இருந்தே துவங்கும்

இனி வர்கச்சக்கரம் எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

எந்த வர்க்கமாக இருந்தாலும் வர்க்க லக்னாதிபதி 3/6/8/12 ல் மறைய கூடாது மேலும் அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகமும் 3/6/8/12 ல் மறைய கூடாது

3மிடம் ஜாதகனால் ஏற்படும் இழப்பு
6மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் கடன் வழக்கு நோய்
8மிடம் அந்த வர்கத்தின் அழிவு
12 மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் அலைச்சல் வீண்செலவுகள்

எந்த வர்க்க லக்னமும் ஜென்ம(D1) லக்னத்தில் இருந்து 6/8/12 ல் மறைய கூடாது

கராக கிரகம்  குறிப்பிட்ட வர்க்க லக்னத்தில் இருந்தால் அது காரகோ பாவநாஸ்தி
உதா குரு D7 எனப்படும் சப்தாம்ச வர்க்க லக்னத்தில் இருந்தால் குழந்தைகளுக்கு நாசங்களை உண்டு பண்ணும்

இது போல் மற்ற வர்க்கங்களிலும் பார்க்கவும்

ஆனால் அனைத்து வர்க்கங்களிலும்
1) செவ்வாய் 6ல் நல்லது
2) புதன் D4 எனும் சதுர்தம்ச வர்கத்தில் 8ல் நல்லது (அனாமத்து    சொத்து கிடைக்கும்)
3) சனி D8 எனும் அஷ்டாம்ச வர்க லக்னத்தில் நல்லது (தீர்காயுள்)

திசை / புத்தியை நடத்தும் கிரகங்கள் வர்கத்தில் 3/6/8/12 ல் மறைய கூடாது

அப்படி மறைந்தால் அந்த கிரகங்களின் திசா புத்தி காலங்களில் அந்த வர்கச்சக்கரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்
வர்கச்சக்கரம் பதிவு 9
  
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்

வர்கச்சக்கரங்கள்  அமைக்கும் முறை
D16 என்பது சோடசாம்சம் 30/16  = 1பாகை 52கலை30
சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும் துவங்கும்

D20 என்பது விம்சாம்சம் 30/20  = 1பாகை 30கலை
சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும் துவங்கும்

D24  என்பது சதுர்விம்சாம்சம் 30/24  = 1 பாகை 15கலை

ஆண் ராசிகளில் வருபவை சிம்மம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை கடகம் முதலும் துவங்கும்

D30 என்பது திரிம்சாம்சம்
ஆண் ராசிகளில் வருபவை
0 – 5       மேஷம்
5 – 10   கும்பம்
10 – 18   தனுசு
18 – 25   மிதுனம்
25 – 30    துலாம்
பெண் ராசிகளில் வருபவை
0 – 5    ரிஷபம்
5 – 12   கன்னி 
12 – 20  மீனம்
20 – 25  மகரம்
25 – 30   விருச்சிகம்
சிம்மம் கடகத்தில் கிரகங்கள் வராது

D40  என்பது கவோடாம்சம் 30/40  = 45கலை

ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்

D45 என்பது அக்சவேதாம்சம் 30/45  = 40கலை

சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும் துவங்கும்

மற்றவை நாளை 

Thursday, 7 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 8
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
வர்கச்சக்கரங்கள் அமைக்கும் முறை 

D7 என்பது சப்தாம்சம் 30/7 = 4பாகை17கலை
ஆண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்தும்
பெண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்து 7வது ராசி முதலும் துவங்கும்

D8 என்பது அஷ்டாம்சம் 30/8 = 3பாகை 45கலை
சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும் துவங்கும்

D9 என்பது நவாம்சம் 30/8 = 3பாகை 20கலை
சர ராசிகளில் வருபவை அதில் இருந்தும்
ஸ்திர ராசிகளில் வருபவை அதில் இருந்து 9 மிடத்தில் இருந்தும்
உபய ராசிகளில் வருபவை அதில் இருந்து 5 மிடத்தில் இருந்தும் துவங்கும்

D10 என்பது சஷ்டியாம்சம் 30/10 = 10பாகை
ஆண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்தும்
பெண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்து 9 வது ராசி முதலும் துவங்கும்

D11 என்பது லாபாம்சம் 30/11 = 2பாகை 43கலை 38 விகலை
மேஷம் முதல் எதிர் சுற்றில் வரும் ரிஷபத்தில் கிரகம் வராது

D12 துவாதசாம்சம் 30/12 = 2பாகை 30கலை
அனைத்தும் அந்தஅந்த ராசிகளில் இருந்தே துவங்கும்

மற்றவை நாளை
வர்கச்சக்கரம் பதிவு 7

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
இன்று முதல் வர்கச்சக்கரம் அமைக்கும் முறையை பார்போம்
D1 என்பது 30 பாகை அளவு கொண்ட ராசிச்சக்கரம்

D2 என்பது 30/2 = 15 பாகை
ஆண் ராசியில் முதல் 15 பாகை சூரிய ஹோரா அடுத்த 15 பாகை சந்திர ஹோரா
பெண் ராசியில் முதல் 15 பாகை சந்திர ஹோரா அடுத்த 15 பாகை சூரிய ஹோரா

D3 என்பது திரேகானம் 30/3 = 10 பாகை
முதல் 10 பாகை அதே ராசியிலும்
இரண்டாவது 10 பாகை அதில் இருந்து 5வது ராசியிலும்
மூன்றாவது 10 பாகை அதில் இருந்து 9 வது ராசியிலும் வரும்

D4 என்பது சதுர்தாம்சம் 30/4 = 7.30 பாகை
முதல் 7.30 பாகை அதே ராசியிலும்
இரண்டாவது 7.30 பாகை அதில் இருந்து 4 வது ராசியிலும்
மூன்றாவது 7.30 பாகை அதில் இருந்து 7 வது ராசியிலும் வரும்
நாங்காவது 7.30 பாகை அதில் இருந்து 10 வது ராசியிலும் வரும்

D5 என்பது பஞ்சாம்ஸ்சம் 30/5 = 6 பாகை
சர ராசிகள் அந்த ராசியில் இருந்தும்
ஸ்திர ராசிகள் அதில் இருந்து 5மிடத்தில் இருந்தும்
உபய ராசிகள் அதில் இருந்து 9 மிடத்தில் இருந்தும் துவங்கும்

D6 என்பது சஷ்டியாம்சம் 30/6 = 5 பாகை (ரோகம்சம் – நோய் )
ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்
மற்றவை நாளை

Tuesday, 5 May 2015

வர்கச்சக்கரம் பதிவு 6

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
இனி வர்கச்சக்கரம் எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

எந்த வர்க்கமாக இருந்தாலும் வர்க்க லக்னாதிபதி 3/6/8/12 ல் மறைய கூடாது மேலும் அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகமும் 3/6/8/12 ல் மறைய கூடாது

3மிடம் ஜாதகனால் ஏற்படும் இழப்பு
6மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் கடன் வழக்கு நோய்
8மிடம் அந்த வர்கத்தின் அழிவு
12 மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் அலைச்சல் வீண்செலவுகள்

எந்த வர்க்க லக்னமும் ஜென்ம(D1) லக்னத்தில் இருந்து 6/8/12 ல் மறைய கூடாது

கராக கிரகம் குறிப்பிட்ட வர்க்க லக்னத்தில் இருந்தால் அது காரகோ பாவநாஸ்தி

(உதா) செவ்வாய் அல்லது குரு D3 எனப்படும் திரேகான வர்க்க லக்னத்தில் இருந்தால் இளைய/மூத்த ஆண் சகோதரதங்களுக்கு நாசங்களை உண்டுபண்ணும்

இது போல் மற்ற வர்க்கங்களிலும் பார்க்கவும்

ஆனால் அனைத்து வர்க்கங்களிலும்

1) செவ்வாய் 6ல் நல்லது
2) புதன் D4 எனும் சதுர்தம்ச வர்கத்தில் 8ல் நல்லது (அனாமத்து
சொத்து கிடைக்கும்)
3) சனி D8 எனும் அஷ்டாம்ச வர்க லக்னத்தில் நல்லது
(தீர்காயுள்)

நாளை முதல் வர்கச்சக்கரம் அமைக்கும் முறையை பார்போம்
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம் 

வர்கச்சக்கரம் பதிவு 2 

வர்கச்சக்கரத்திற்கு செல்லும் முன் ராசிச்சக்க்ரத்தில் சில விஷயங்களை பார்போம் ராசிச்சக்க்ரம் என்பதும் D1 எனப்படும் ஒரு வர்க்கமே

 D1ல் கிரகணம், கிரக யுத்தம், அஸ்தங்கதம் போன்ற நிலைகளில் பலம் இழந்த கிரகங்கள் வர்க்கசக்கரத்தில் என்ன நிலையில் இருந்தாலும் பலன் இல்லை

கிரகணம், கிரக யுத்தம், அஸ்தங்கதம் போன்ற நிலைகளில் பலம் இழந்த கிரகங்களின் வீட்டில் எந்த வர்க்க லக்னம் அமைந்தாலும் அந்த வர்க்கம் தொடர்பான எந்த ஒரு பலனையும் ஜாதகன் அனுபவிக்க முடியாது

(D1ல் நீச்சம் பெற்ற கிரகத்தை வர்கச்சக்கரத்தில் பார்த்துக்கொள்ளலாம்)

உ.தா. D1ல் குரு அஸ்தங்கதம் எனில் தனுசு அல்லது மீனத்தில் தசாம்ச லக்னம்(D10 லக்னம்) அமைந்தால் ஜாதகனுக்கு தொழில் அமைவது கடினம் நிரந்தர தொழில் அமையாது
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
வர்கச்சக்கரம் பதிவு 1

ராசி சக்கரம் என்பது எக்ஸ்ரே ரிப்போர்ட் வர்க்கச்சக்கரம் என்பது ஸ்கேன் ரிப்போர்ட் வட இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக சிறப்பாக வர்கச்சக்கரம் மூலம் பலன் கூறுகின்றனர்

வர்க்கச்சக்கரம்;
ஜாதகப் பலன்கள் கூறவதற்கு கடைப்பிடிக்கப் பயன்படும் பல்வேறு முறைகளில் வர்க்கச் சக்கரங்கள் மூலம் கணித்து பலன் கூறும் முறை சிறந்த முறையாக கருதப்படுகிறது. 30 பாகை கொண்ட ஒரு இராசியை பல்வேறு சிறு அளவில் பங்கிட்டு அதனால் ஏற்படும் கூட்டு விளைவினின்று ஏற்படும் பலன்களை எடுத்துரைப்பது தான் வர்க்கச் சக்கரங்கள். பதினாறு வர்க்கச் சக்கரங்களை மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள். 


அவை:
1. இராசி - ஒரே பிரிவு - 30 பாகைகள் - அனைத்து பலன்களும்.
2. ஹோரா - இரு பிரிவு – 15 பாகைகள் - செயல் நிலை.
3. திரேக்காணம் - மூன்று பிரிவு – 10 பாகைகள்- சகோதரம், மச்சம், மரு,  

    விபத்து.
4. சதுர்த்தாம்சம் - நான்கு பிரிவு – 7 பாகை 30 கலை - அதிர்ஷ்டம், சொத்துக்கள், குழந்தைப் பருவம்.
5. சப்தாம்ஸம் - ஏழு பிரிவு – 4 பாகை 17 கலை 8.57 விகலை -குழந்தைகள்
6. நவாம்சம் - ஒன்பது பிரிவு – 3 பாகை 20 கலை - களத்திரம், திருமணவாழ்க்கை, கோள்களின் பலம், சாதகரின் அந்தஸ்து.
7. தசாம்சம் - பத்து பிரிவு – 3 பாகை – தொழில் மற்றும் ஜீவனம்
8. துவதாசம்சம் - 12 பிரிவு – 2 பாகை 30 கலை - பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள்.
9. சோடசாம்சம் - 16 பிரிவு – 1 பாகை 52 கலை 30 விகலை. - வாகனங்கள், சகபோக பொருட்கள், மகிழ்ச்சி
10. விம்சாம்சம் - 20 பிரிவு – 1 பாகை 30 கலை – உபாசன சக்தி, செயலாற்றும் தன்மை
11. சதுர்விம்சாம்சம் - 24 பிரிவு – 1 பாகை 15 கலை - உயர்கல்வி, அறிவாற்றல், கல்வியில் சாதனை.
12. பாம்சம் - 27 பிரிவு – 1 பாகை 6 கலை 40 விகலை - புறத்தோற்றம், பலம், மனநிலை, ஆன்மீகத் தொடர்பு
13. திரிம்சாம்சம் - 5 சமமற்ற பிரிவு – துன்பங்கள், தீமைகள், துர்திர்ஷ்டம்
14. சுவேதாம்சம் - 40 பிரிவு – 0 பாகை 45 கலை - அதிர்ஷ்டம், தாயர் வழிச் சொத்துக்கள்.
15. அக்ஷ்வேதாம்சம் - 45 பிரிவு – 0 பாகை 40 கலை - தந்தை வழிச் சொத்துக்கள்
16. சஷ்டியாம்சம் - 60 பிரிவு – 0 பாகை 30 கலை - முற்பிறப்பின் கர்மா, இப்பிறப்பின் பலன்கள்.

இனி வரும் பதிவுகளில் வர்கச்சக்கரம் எப்படி அமைப்பது எப்படி பார்ப்பது மேலும் அதன் மூலமாக எப்படி பலன் சொல்வது என்பதையும் பார்போம்
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
வர்கச்சக்கரம் பதிவு 3

வர்கச்சக்கரத்திற்கு செல்லும் முன் ராசிச்சக்க்ரத்தில் சில விஷயங்களை பார்போம் ராசிச்சக்க்ரம் என்பதும் D1 எனப்படும் ஒரு வர்க்கமே

D1ல் உள்ள யோகி அவயோகி மற்றும் அனைத்து யோகம் கிரகபலம் கிரகபார்வை என D1ல் பார்க்கும் அனைத்தும் வர்கச்சக்கரத்தில் உண்டு
மேலும் வர்கச்சக்கரத்தில் கீழ் கண்ட கிரகங்கள் மிகவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்

1) வர்க்க லக்னம்
2) வர்க்க லக்னஅதிபதி
3)அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகம்
4) வர்க்கம் தொடர்பான பாவ கராக கிரகம்
5)யோகி
6)அவயோகி

இதில் எந்த கிரகமும் 3/6/8/12ல் மறையகூடாது மற்றும் கெடகூடாது
காரக கிரகம் அது தொடர்பான வர்க்க லக்னத்தில் நிற்ககூடாது
அனைவர்க்கும் வணக்கம் அஸ்ட்ரோ சக்தியின் இன்றைய ஜோதிட வகுப்பில்
வர்கச்சக்கரம் பதிவு 5

யோகி                          அவயோகி

சூரியன்                        சனி
சந்திரன்                       புதன்
செவ்வாய்                  கேது
புதன்                            செவ்வாய்
குரு                              சூரியன்
சுக்கிரன்                     குரு
சனி                              சந்திரன்
ராகு                             சுக்கிரன்
கேது                            ராகு

மூன்று கிரக அணிகள்
1) கேது சந்திரன் குரு
2) சுக்கிரன் செவ்வாய் சனி
3) சூரியன் ராகு புதன்

இந்த அணியில் ஒரு கிரகம் யோகியாக இருந்தலும் மற்ற இரு கிரகங்களும் யோகியை போன்றே செயல்படும்

இதே போல் மனிதர்களையும் மூன்று பிரிவாக கிரக அணிகளை கொண்டு பிரிக்கலாம்

1) கேது சந்திரன் குரு யோகியாக உள்ளவர்கள் என்றும்
எதிலும் முழு நிறைவு அடையமாட்டார்கள்
2) சுக்கிரன் செவ்வாய் சனி யோகியாக உள்ளவர்கள் என்றும்
(மெட்டிரியல்) பொருளாதார வாழ்க்கை மட்டும்
வாழ்பவர்கள்
3) சூரியன் ராகு புதன் யோகியாக உள்ளவர்கள் என்றும்
சேவை (சர்வீஸ்)மனப்பான்மையுடன் வாழ்க்கை
வாழ்பவர்கள்

மேற்கூறிய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கூறிய பலன் ஏற்படும்

குறிப்பாக கேது யோகியாக உள்ளவர்கள் அதிக அளவு மனரீதியான போராட்டங்களை வாழ்க்கை முழுவதும் சந்திக்கின்றனர்

வர்கச்சக்கரத்திலும் யோகி அவயோகியின் பங்கு மிகவும் முக்கியம்
மீண்டும் நாளை சந்திப்போம்
அனைவர்க்கும் வணக்கம் அஸ்ட்ரோ சக்தியின் இன்றைய ஜோதிட வகுப்பில்

வர்கச்சக்கரம் பதிவு 4

யோகி அனுயோகி அவயோகி இவர்கள் யார் எப்படி கண்டுபிடிக்க?

ஜெனன ஜாதகத்தில் உள்ள

சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை = யோகி

இந்த மூன்றையும் கூட்டி வரும் ஸ்புடம் மேஷம் முதல் கணக்கிட

எந்த நட்ச்சத்திரத்தி
ல் வருகிறதோ அந்த நட்ச்சத்திர அதிபதி யோகி

அந்த ராசியின் அதிபதி அனுயோகி

யோக ஸ்புடம் எந்த நட்ச்சத்திரத்தில் வந்ததோ அதில் இருந்து

ஆறாவது நட்ச்சத்திர அதிபதி அவயோகி

யோகி 3/6/8/12 ம் அதிபதியாக இருந்தாலும் நன்மை செய்வார்

அவயோகி யாராக இருந்தாலும் கெடுதல் செய்வார்

உ தா 5/9 ம் அதிபதி அல்லது ஆத்மகாரகன் ஆனாலும் கெடுதல் செய்வார்

ஜெனன ஜாதகத்தில் யோகி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே யோக பலனை தருவார்
யோகி நல்ல நிலையில் உள்ள ஜாதகங்களே யோக ஜாதகங்கள்

இனி யோகி என்ன செய்வார் அவயோகி என்ன செய்வார் என பார்போம்

யோகி அனுயோகி அவயோகி இவர்கள் திசை / புத்திகளுக்கு அப்பற்பட்டவர்கள்

திசை/புத்தி , 7 ½ சனி அஷ்டம சனி இவை அனைத்தும் மாறும் ஆனால் ஆயுள் முழுக்க யோகி அனுயோகி அவயோகி இவர்களின் பலன் தொடர்ந்துவரும்
யோகியின் காரகத்துவ பலன்கள் சுபமாகவும்

அவயோகியின் காரகத்துவ பலன்கள் அசுபமாகவும்

உதாரணம் – புதன் யோகி எனில் புதனின் காரகத்துவ பலன்களான ஜோதிடம், கணக்கு, தணிக்கை, பச்சை நிறம், தாய் மாமன், புதன் கிழமை இது போன்ற இன்னும் பல காரகத்துவ பலன்கள் சுபமாகவும்

உதாரணம் – செவ்வாய் அவயோகி எனில் இளைய ஆண் சகோதரம் முலம் தொந்தரவு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் சிவப்பு நிறம் செவ்வாய் கிழமை இது போன்ற இன்னும் பல காரகத்துவ பலன்கள்
அசுபமாகவும்

இவையெல்லாம் பிறப்பு மூதல் இறப்பு வரை மாறாது

மற்ற கிரகங்கள் யோகி அவயோகி ஆனால் என்ன செய்யும் என்பதை ஜோதிடர்களாகிய நீங்கள் சிந்திக்கவும்

ஜோதிடர் ஆகிய நாம் சொல்லும் பலன்கள் தவறாக போவதற்க்கு யோகி அவயோகி பார்க்காமல் பலன் சொல்வதே முக்கிய காரணம்