Monday, 6 July 2015

அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பின் எனது ஒரு பதிவு
ரோகாம்சம் எனும் D 6 எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

D6 என்பது ரோகாம்சம் 30/6  = 5 பாகை (ரோகாம்சம் – நோய் )

ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்

D 6 லக்னத்தில் உள்ள கிரக காரகம் தொட்டு நோய் வரும்
உதா D 6 லக்னம் துலாம் அதில் ராகு/கேது இருந்தால் மூலம்(பைல்ஸ்) நோய் வரும்
D 6 லக்னம் கன்னி அதில் செவ்வாய் இருந்தால் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு வரும்
இது போல் மற்ற கிரக காரகதத்துவம் பார்க்கவும் 

மேலும் D 6 லக்னம் உள்ள ராசி குறித்த பஞ்ச பூத தத்துவம் கொண்ட வியாதி வரும்
மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவ நோயயை எளிதில் குணப்படுத்த முடியாது

மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவம் தொடர்பான மருத்துவம் பலன் அளிக்காது

உதா சூரியன் எனில் ஆங்கில மருத்துவம்
சந்திரன் எனில் ஹோமியோபதி மருத்துவம் 
இது போல் மற்றவை பார்க்கவும்

D 6 ல் வரும் நோயை குணப்படுத்த முடியுமா என பார்க்க D 30 ல் பார்க்க வேண்டும்

இது ஜோதிடர்களுக்கான பதிவு நன்றிகளுடன் அஸ்ட்ரோ சக்தி



No comments:

Post a Comment